அதானி குழுமத்தில் பெரிய முதலீடு செய்யும் பிரபல நிறுவனம்
இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக அதானி குழும நிறுவனம் திகழ்கிறது.இந்த நிறுவனத்தில் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக பிரான்சை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனம் முதலீடு செய்கிறது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரியில் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தது. அதற்கு பிறகு அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு கணிசமாக குறைந்தது. இந்த சரிவுக்கு பிறகு டோட்டல் நிறுவனம் முதலீடு செய்யும் அதிக தொகை இதுவாகும். தூய்மையான ஆற்றல் என்ற பிரிவில் இந்த முதலீடுகள் செய்யப்படுகின்றன. அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டால் சரிந்த அதானி நிறுவன பங்குகள் , உச்சநீதிமன்ற நிபுணர்கள் குழுவினர் அளித்த இடைக்கால அறிக்கையால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதானி கிரீன் நிறுவனத்தில் பசுமைப்பிரிவு பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன.அதானி குழுமத்தில் அதானி பசுமை பிரிவில் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவன பங்குகள் 20%,அதானி கேசில் 37.4 % பங்குகள் உள்ளன. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் செய்யப்பட்ட முதலீடு கடந்தாண்டு இறுதியில் 10 பில்லியன் டாலராக மாறியதாக டோட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் மொரீசியஸ் உள்ளிட்ட இடங்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.