டைம் பத்திரிகையில் வந்த இந்தியாவின் ஒரே நிறுவனம்…
2023ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் 100 நிறுவனங்களின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி,பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இன்போசிஸ் நிறுவனம் இடம்பிடித்துள்ளது. உலகளவில் 750 சிறந்த நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு 64ஆம் இடம் கிடைத்துள்ளது. உலகளவில் இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் ,ஆப்பிள்,ஆல்பாபெட் ,மெட்டா நிறுவனங்கள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. 1981ஆம் ஆண்டு 7 பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனம்,இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய டெக் நிறுவனமாக திகழ்கிறது.இந்தியாவில் இந்த நிறுவனத்தில் தற்போது 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.இதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். பணியாளர்களின் மனநிறைவு,வருவாய் வளர்ச்சி மற்றும் தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களில் இந்த பட்டியல் தயாராகியுள்ளது. உலகம் முழுவதும் பணியாற்றும் இன்போசிஸ் நிறுவன பணியாளர்கள் 1.5லட்சம் பேரிடம் பணியில் மன நிறைவு பற்றி கருத்துகள் கேட்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழலையும்,சமூக விவகாரங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கருத்துக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்திய அளவில் தலை சிறந்த 3 சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் இன்போசிஸ் திகழ்கிறது.இந்த பட்டியலில் அக்சென்சர் மற்றும் டெலாய்ட் ஆகிய நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன. டாப் 200 இடங்களில் இந்தியாவின் மற்றொரு நிறுவனமான விப்ரோ இடம்பிடித்துள்ளது. விப்ரோ நிறுவனத்துக்கு 174 ஆவது இடம் கிடைத்திருக்கிறது.