பெரும்பணக்காரர்களும் வாரிசுகளும்..
இந்தியாவில் ஒரு தொழில் தொடங்கி அதில் சாதிப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.அதனை பலஆண்டுகளாக சிறப்பாக செய்து வரும் ஜாம்பவான்களுக்கு தற்போது வயதாகிவிட்டது. அவர்களுக்கு பிறகு யார் இந்த சாம்ராஜ்ஜியங்களை எடுத்துச்செல்வார்கள் எப்படி மேம்படுத்துவார்கள் என்பதை பார்க்கலாம். இந்தியாவின் பெரும்பணக்காரர்களில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி, 16 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு சொத்து வைத்திருக்கும் இவருக்கு 3 குழந்தைகள்,மூவரையும் அடுத்த பிஸ்னசுக்கு அவர் ஆயத்தப்படுத்திவிட்டு,மெல்ல மெல்ல தனது ஓய்வு நேரத்தை அதகரித்து வருகிறார். ஆனால் கோடக் மகேந்திரா வங்கியின் உதய் கோடக் தனக்கு பிறகு தனது குடும்பத்தில் யாரையும் பெரிதாக இந்த வணிகத்திற்குள் நுழைக்கவில்லை.அவரின் மகன் தவால் தற்போதுதான் படித்து முடித்திருக்கிறார். அதானி,டாக்டர் ரெட்டீஸ்,அப்போலோ,கோத்ரெஜ்,முருகப்பா,ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் தங்கள் குழந்தைகள்,பேரன்கள் என 5 தலைமுறைகள் கூட அடுத்தகட்ட நிர்வாகத் திறமையை வளர்த்து வருகின்றனர்.சில இடங்களில் பிரபலங்களின் மனைவிகள்,குழந்தைகள், பெண் பிள்ளைகளையும் தொழிலதிபர்கள் களமிறக்கியுள்ளனர் . 91 வயதாகும் பிரதாப் ரெட்டி தனது 4 மகள்களுக்கும் தனது தொழில் நுனுக்கங்களை கற்றுத்தந்துள்ளார். மகிந்திரா குழுமத்தில், ஆனந்த் மகிந்திராவின் இரு மகள்களையும் அவர் வணிகத்திற்குள் கொண்டுவரவே இல்லை.சிப்லா நிறுவனத்தின் யூசூப் ஹமைத் தனது காலத்துக்கு பிறகு நிறுவனத்தை வேறு நிறுவனத்துக்கு விற்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ராகுல் பஜாஜ் தனது மகன்களுக்கு ஆட்டோமொபைல் மற்றும் நிதித்துறையை யார் கவனிக்க வேண்டும் என்று தெளிவாக பிரித்துள்ளார்.
இன்னும் சில தொழிலதிபர்களோ தங்கள் குடும்பத்தின் பெயரில் உள்ள அறக்கட்டளைகளுக்கு அனைத்தும் செய்து வருகின்றனர்.வாரிசு அரசியல் போல வாரிசு தொழிலதிபர்களும் தங்கள் குழந்தைகளை அழகாய் தங்கள் பக்கம் இழுத்துச்செல்வது கண்கூடாக பார்க்க முடிகிறது.