டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு..
பங்குச்சந்தைகளில் பரிவர்த்தனைகள் செய்யும் நபர்களிடம் கட்டாயம் டிமேட் கணக்கு இருக்கும்.இவர்கள் தங்கள் கணக்குகளுடன் நாமினி எனப்படும் வாரிசுகளை பதிவு செய்ய வரும் 30ஆம் தேதி வரை கெடு விதித்திக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து செபி ஆணையிட்டுள்ளது.நேரடியாக வணிகம் செய்வோர் உரிய ஆவணங்களை குறிப்பாக பான் எண்ணுடன் வரும் இணைப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.முதலீட்டாளர்கள், பதிவாளர்கள் , பார்வையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து டிரேடர்களும் பான்-ஆதார் இணைந்து நாமினியை மார்ச் 2022-ல் பதிவு செய்ய இந்திய பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைச்சதம் சந்தைகள் அறிவுறுத்தின. பின்னர் அது செப்டம்பர் வரை அவகாசமும், தற்போது 3ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.