உணவு பாதுகாப்புத்துறை அதிரடி..
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான FSSAIஅண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறப்புப்பிரிவில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார் அளிக்க பிரத்யேக FoSCoS போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் திருநர் மற்றும் பெண்கள் என அனைத்து பாலினத்தவரும், பாகுபாடின்றி புகார்களை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.உணவுத்துறையில் திருநர் சமூகத்தினரை தொழில்முனைவோராக்கவும்,அவர்களை சமமாக நடத்தவும் இந்த திட்டம் வகைசெய்யப்பட்டுள்ளது.உணவு உரிமம் மற்றும் பதிவுத்துறைக்கு பிரத்யேக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவணங்களை சரிபார்க்கும்போது மட்டுமே அதுவும் ஆதார் அல்லது பான் எண் சரிபார்க்க மட்டுமே பாலினம் கோரப்படுகிறது.உணவுத் துறையில் திருநரின் பங்களிப்பையும்,அவர்கள் சமையல் திறமையையும் வெளிக்கொண்டுவர இந்த புதிய முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. அனைவரையும் சமமாக மதிக்க யார் முயன்றாலும் அதை முழுமனதுடன் ஏற்கலாமே தவறு ஏதும் இல்லை என்பதை துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.