சமாளிக்கும் சந்தைகள்
இந்தியாவில் செப்டம்பர் 26 ஆம் தேதி பங்குச்சந்தைகள் பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை. செவ்வாய்க்கிழமை வர்த்தக நேர முடிவில்மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிந்து 65,945புள்ளிகளாக சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து19,664 புள்ளிகளாக சரிந்தது. தொடக்கம் முதலே உயர்ந்த பங்குச்சந்தைகள் ,பிற்பகலி்ல் வெகுவாக சரிந்தன.Eicher Motors, Nestle India, Bajaj Auto, Hero MotoCorp,ONGCஆகிய துறை பங்குகள் உயர்வை கண்டன.IndusInd Bank, Tech Mahindra, Cipla, Kotak Mahindra Bank,Adani Enterprises. ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.மருந்து,தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. எனினும் வங்கிகள் சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்தன. Anand Rathi Wealth, Jyoti, Shreyas Shipping & Logistics, RPP Infra Projects, IFCI, Coal India, Bedmutha Industries, TVS Motor Company, Tata Consumer Productsஉள்ளிட்ட துறை பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் விலை குறைந்து 5505 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 40 காசுகள் குறைந்து 77 ரூபாய் 60 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து 77ஆயிரத்து 600ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் மாறுபடும் செய்கூலி,சேதாரம் சேர்க்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு நண்பன் கூட உதவாமல் போகலாம் அந்த நேரத்தில் தங்கம் உங்களுக்கு கைகொடுக்கலாம். இயன்றவரை மூதலீடுகளை தங்கத்தில் போடலாம்.