மானியம் 4 லட்சம் கோடி ரூபாயா…?

இந்தியாவில் ஏழை மக்கள் பலனடையும் வகையில் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேவையற்றவர்களுக்கு செல்லும் மானியத்தை முறைப்படுத்தவும், அரசின் பணம் வீணாவதை தடுக்கவும் புதிய விதிகளை அரசு வகுத்து வருகிறது. குறிப்பாக நிதி ஆயோக்,அமைப்பு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் சிலிண்டர் மானியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இருக்கிறது.இந்தியாவில் உள்ள உணவு பாதுகாப்பு சட்டம் மூலமாக மக்களின் வறுமை நிலை மாற்றப்பட்டு வருகிறது.ஆற்றல் சேமிப்பில் சீனா,அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக டெமோ என்ற வளர்ச்சி கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் எல்பிஜி பயன்பாடு ஒரே ஆண்டில் 12.3% அதிகரித்துள்ளது.இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மதிய உணவுத்திட்டம், இலக்கு வைக்கப்பட்ட பொதுவிநியோகத்திட்டம்,ஐசிடிஎஸ் ஆகிய அமைப்புகள் மூலமாக ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. பொது விநியோகத்துறைக்கு மட்டும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 618 கோடி ரூபாயும்,மதிய உணவுத்திட்டம்,ஐசிடிஎஸ் ஆகியவற்றிற்கு முறையே 12900 கோடி மற்றும் 17252 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக உணவு மற்றும் கேஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது.