ஸ்வைப் செய்து மலைக்க வைக்கும் இந்தியர்கள்…
இந்தியாவில் ஒருவர் விரும்பினாலும் இல்லையென்றாலும் அவர்கள் தலையில் ஏதோ ஒருவகையில் கடன் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கடன் வாங்குவதில் பெயர் பெற்ற இந்தியர்கள் தற்போது புதிய மோசமான சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர். என்னவென்று தெரியுமா?கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியர்கள் கிரிடிட் கார்டில் ஸ்வைப் செய்து பெற்ற கடன் அளவு மட்டும் 1.48 டிரில்லியன் ரூபாய்.இது ஜூலை மாத அளவைவிடவும் ஏன் இதுவரை இல்லாத அளவு அதிகமாகும்.இந்தியர்கள் வீடுகள் ஏற்கனவே கடன் அதிகரித்து,கையில் இருந்த சேமிப்புகள் கரைந்துவிட்டன.இந்த நிலையில் கிரிடிட் கார்டில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த இயலாத சூழலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிகம் செலவு செய்வது மோசமான நிலை என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.கிரிடிட் கார்டு கடன்கள் எப்போதும் பாதுகாப்பு இல்லாத கடனாகவே வகை படுத்தப்படுவதால் அந்த சிக்கல் வங்கிகளுக்கும் அதிக தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.வரும் நாட்களில் பண்டிகைகளும் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் ரெபோ வட்டி விகிதம் குறைவாக இருந்தபோது வாங்கிய கடன்கள் , வங்கிகளையும், நிறுவனங்களையும் ஒரு நிமிடம் யோசிக்கத்தான் வைத்திருக்கின்றன.