முதுகில் குத்தினானா நண்பன்?
உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ள நிலையில் பல்வேறு பொருளாதார தடைகளை கடந்தும் ரஷ்யா போரை தொடர்ந்து வருகிறது. அந்த நேரத்தில் கச்சா எண்ணெயை மலிவு விலையில் இந்தியா வாங்கியது முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில் இந்தியாவுக்கு 80 டாலர்கள் என்ற அளவில்தான் ரஷ்யா கச்சாஎண்ணெயை வழங்கியதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இது மேற்கத்திய நாடுகள் விதித்தஉச்சபட்ச அளவைவிடவும் 20டாலர்கள் அதிகமாகும். வெளிநாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ஜூலை மாதத்திற்கு பிறகு 60 டாலர்களுக்கு மேலாகவே விற்பனை செய்யப்படுவதாகவும்,சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நாடுகள் இணைந்து முடிவெடுத்த பிறகே இந்த விலை உயர்வு அமலாகியிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் உற்பத்தி குறைப்பு காரணமாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் டீசல்களில் 5-ல் இரண்டு பங்கு ரஷ்ய கச்சா எண்ணெயாகவே இருக்கிறது. டீசல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ரஷ்யா தீவிரப்படுத்தியதன் காரணமாகவும் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு கெடுபிடி அதிகரிக்கும் வகையில் மேற்கத்திய நிறுவனங்களின் சரக்கு கையாளும் வசதிக்கு மறைமுக தடை மற்றும் அதிகபட்சம் 60 டாலர்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் காரணமாக மற்ற நாட்டு கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் இந்த மாதம் முதல் துருக்கி,பிரேசில்,பல்கேரியாவுக்கும் சீனாவுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.