உடைகிறது வேதாந்தா….
பெரிய தொழிலதிபரான அனில் அகர்வால் வேதாந்தா குழுமத்தை நிர்வகித்து வருகிறார். இவரின் நிறுவனங்கள் தற்போது வரை ஒரே குடையின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் உலோகம், ஆற்றல்,அலுமினியம்,எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு வணிகங்களை தனித்தனியான 6 சிறிய நிறுவனங்களாக உடைப்பதாக அந்நிறுவனம் கடந்த 29ஆம் தேதி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு துறையிலும் தனிப்பட்ட ஆற்றல் எவ்வளவு என்பதை கவனிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து துறைகளும் இயற்கை வளங்களை சார்ந்தே இருந்து வருகிறது. இயற்கை வளங்களை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆற்றலாக மாற்றும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு தலா 1 பங்கு புதிய 5 நிறுவனங்களில் கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உலோகங்கள் மற்றும் தாதுக்கள் சார்ந்த தொழில்களுக்கு பெயர் பெற்ற வேதாந்தா குழுமத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு துறையும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் இயங்கும் வகையில் பணிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.கார்பன் உமிழ்வை 2050ஆம் ஆண்டுக்குள் 0 ஆக்க வேதாந்தா குழுமம் உறுதியேற்றுள்ளது.தங்கள் நிறுவனங்களில் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் 1.8 ஜிகாவாட் பயன்படுத்தப்படுவதாகவும் வேதாந்தா தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் வேதாந்தா குழும பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 7%வரை சரிந்தது.