செந்நிறத்தில் முடிந்த சந்தைகள்..
உலகளாவிய சூழல்கள்,மற்றும் இந்திய நிலவரம் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்திய சந்தைகளில் அக்டோபர் 3ஆம் தேதி பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் இந்திய சந்தைகளில் குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 316 புள்ளிகள் சரிந்து 65,512 புள்ளிகளில் வர்த்தகமானது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் குறைந்து 19,528 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையில் ONGC, Eicher Motors, Hindalco Industries, Maruti Suzuki,Dr Reddy’s Laboratories ஆகிய நிறுவனங்கள் பெரிதாக சரிந்தன.Titan Company, Bajaj Finance, L&T, Bajaj Finserv, Adani Ports உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய லாபத்தை சந்தித்தன.ஆட்டோமொபைல்,உலோகம்,எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை சரிந்தன. பொதுத்துறை வங்கிகள் 2.3%வரை விலை உயர்ந்தன. JSW Energy, BL Kashyap And Sons, PNB Housing Finance, L&T, Union Bank Of India, Jyothy Labs, GPT Infraprojects, DB Corp, Canara Bank, Torrent Power, Zomato.உள்ளிட்ட 250க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 528 ரூபாய் குறைந்து 42ஆயிரத்து320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 66 ரூபாய் குறைந்து 5290 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் விலை குறைந்து 73ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,000ரூபாய் குறைந்து 73ஆயிரத்து 500ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த 25ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை உயரவே இல்லை என்பது கூடுதல் தகவலாகும். இந்த விலைகளுடன் செய்கூலி,சேதாரம் சேர்க்க வேண்டும், ஆனால் இது கடைக்கு கடை மாறும், இதோடு 3 விழுக்காடு ஜிஎஸ்டியும் கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.