அந்த விஐபி நிறுவனத்துக்கு என்னாச்சு…
இந்தியாவில் சூட்கேஸ் தயாரிப்புக்கு பெயர் பெற்ற நிறுவனமாக விஐபி நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் தனது புரோமோட்டர்களின் பங்குகளை முழுமையாக விற்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்தநிறுவனப்பங்குகள் விற்க முயற்சி நடைபெற்றுவருகிறது. யார் வேண்டுமானலும் வாங்கும் வகையில் இதற்கான பணிகள் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இன்கிரெட் என்ற நிறுவனம் இந்த விற்பனைக்கான பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளது. திலீப் பிரமல் என்பவரிடம் மட்டும் இந்த நிறுவனத்தின் 50% பங்குகள் உள்ளன.
விஐபி, கார்ல்டன்,ஸ்கைபேக்ஸ் உள்ளிட்ட பிராண்டுகளில் சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ் எடுத்துச் செல்லும் பொருட்களை விஐபி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த குழுமத்தின் மதிப்பு 9310 கோடி ரூபாயாக இருக்கிறது.இதில் புரமோட்டர்களின் பங்கு மட்டும் 4650 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியர்கள் வழக்கத்தைவிட அதிகமாக பயணம் மேற்கொண்டு வருவதால் அவர்களுக்கான சூட்கேஸ் தேவை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்று பணம் பார்க்க விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அசிம் பிரேம்ஜி விஐபி நிறுவனத்தின் 1.66 % பங்குகளை வைத்துள்ளார். லக்கேஜ் சார்ந்த பொருட்கள் சந்தையில் விஐபி நிறுவனத்தின் பங்கு மட்டும் 44%ஆக இருக்கிறது.2004ஆம் ஆண்டு கார்ல்டன், 2007ஆம் ஆண்டு அரிஸ்டோ கிராட் என்ற நிறுவனத்தையும் ஏற்கனவே விஐபி நிறுவனம் பெற்றுள்ளது.கடந்த மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் லாபம் மட்டும் 160 கோடி ரூபாயாக உள்ளது.மொத்த வருவாய் 2019 கோடி ரூபாயாக இருக்கிறது.