L&Tஅதிரடி மாற்றங்கள்..கெட் ரெடி ஃபோக்ஸ்…
பிரபல கட்டுமான நிறுவனமான L&Tயின் புதிய நிர்வாக இயக்குநராக எஸ்.என். சுப்பிரமணியன் தனது பணியாளர்களுக்கு முதல் கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் சுற்றுச்சூழல் பயங்கரமாக மாறி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றத்துக்கு தயாராக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல், தகவமைப்பு,சுயசார்பு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். செயல்திறனில் இருந்து மாற வேண்டாம் என்றும் அவர் தனது ஊழியர்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளார்.தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தனக்கு முன்பு பணியில் இருந்தவர்களுக்கும் சுப்ரமணியன் நன்றி தெரிவித்துள்ளார்.23 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் முழு பொறுப்பையும் தற்போது சுப்ரமணியன் ஏற்றுள்ளார்.அனைவரும் ஒருங்கிணைந்து பலரின் வாழ்க்கையை மாற்ற பாடுபடுவோம் என்றும் பணியாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.