பார்க்லேஸ் தந்திரம்…
பிரிட்டனில் மிகவும் பெயர் பெற்ற வங்கியாக பார்க்லேஸ் திகழ்கிறது. இந்த வங்கி மீது மூத்த ஐடி ஊழியர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். அதாவது தகவல் திருட்டு குறித்து அவர் பார்க்லேஸ் மீது சரமாரி புகார்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக நடந்த வழக்கில்,புனே நீதிமன்றம் கடந்த மார்ச் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் அதுல் குப்தா என்பவருக்கு பார்க்லேஸ் நிறுவனம் அபராதமாக 96 லட்சம் ரூபாய் செலுத்த ஆணையிட்டது. இந்த சூழலில் பார்க்லேஸ் இதற்கு பதில் அளித்துள்ளது. நிறுவனத்தில் பிரச்னை இருக்கிறது என்று தெரிவித்த காரணத்திற்காக தம்மை நிறுவனம் பழிவாங்குவதாகவும் அதுல் குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பார்க்லேஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. நிறுவனத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை அறிவிப்பதற்கு அனைத்து பணியாளர்களுக்கும் உரிமை உள்ளதாக கூறியுள்ள பார்க்லேஸ், முழு பாதுகாப்பும் குறிப்பிட்ட பணியாளருக்கு அளிக்கத் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரச்னை இருப்பதாக கூறும் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கை பார்க்லேஸ் நிறுவனத்துக்கு ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள் நிபுணர்கள் கடந்த 2017ஆம் ஆண்டும் ஜெஸ் ஸ்டெய்லிக்கும் இதேபோன்ற ஒரு பிரச்னை எழுந்ததாகவும் வரலாறு கூறுகிறது. குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து அனைவரையும் ஒரே மாதிரி நிறுவனம் நடத்துவதாக கூறமுடியாது என்றும் அந்நிறுவனம் சார்பில் வாதிடுகின்றனர். பணியில் இருந்து நீக்கப்பட்ட அதுல் குப்தாவுக்கு 3 மாதம் கூடுதல் சம்பளம் அளிக்கப்பட்டதாக பார்க்லேஸ் தெரிவித்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளின்போது போலியான ஆவணங்களை வங்கி தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 1.4 டெராபைட் அளவு தரவுகள் திடீரென எப்படி டெலிட் செய்திருக்க முடியும் என்பதே வழக்கின் முக்கிய கருவாகும்.குற்றச்சாட்டை முன்வைக்க முற்பட்டபோது பார்க்லேஸ் நிறுவனம் அவசர அவசரமாக போலி ஆவணங்கள் தயாரித்ததுடன், தம்மை பணிநீக்கம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் மும்பை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.