நிம்மதி பெருமூச்சுவிட்ட முதலீட்டாளர்கள்..
அக்டோர் 5ஆம் தேதி உலகளாவிய சந்தைகளில் மீள் நிலை ஏற்பட்டதால் இந்திய சந்தைகளில் உயர்வு காணப்பட்டது. அமெரிக்க கருவூல வருவாய் மற்றும் டாலர் குறியீடு வலுவானதன் காரணமாகவும் இந்திய சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்ததுடன், 65,631 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் 108 புள்ளிகள் உயர்ந்த தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 19,544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகத்தின்போது 2,178 நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன.ஆயிரத்து 361புள்ளிகள் சரிந்து முடிந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்பதை குறைத்ததால் இந்திய சந்தைகள் நிலைபெற்றன. வங்கி மற்றும் ஐ.டி.துறை பங்குகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் Larsen & Toubro, Bajaj Auto, Titan, TCS,Infosys. ஆகிய நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன.Power Grid, Hindalco, NTPC, Tata Consumer Products, Cipla ஆகிய நிறுவனங்கள் சரிவில் முடிந்தன. Ashoka Buildcon, Coromandel International, Force Motors, JK Tyres ஆகிய நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் காணப்பட்டது.Adani Total Gas, Navin Fluroine ஆகிய நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத குறைவான அளவை எட்டின. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 5295 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து360 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400ரூபாய் அதிகரித்து 73ஆயிரத்து 500ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் 3%நிலையான ஜிஎஸ்டியும், செய்கூலி,சேதாரமும் சேர்க்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.