“சேவைக்கட்டணம் விதிப்பதில் எந்த விதிகளும் இல்லை…”
எங்காவது ஒரு ஹோட்டலுக்கு போனால் சாப்பாடு நன்றாக இருந்தாலும் அவர்கள் அளிக்கும் பில் பலருக்கும் ஷாக் அடிக்கும். அந்தளவுக்கு சேவைக்கட்டணம் போடுவார்கள். இந்த சூழலில் தேசிய ரெஸ்டாரன்ட் சங்கமான NRAI டெல்லி உயர்நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளது. அதில் இந்தியாவில் உணவு பில்லுடன் சேவைக்கட்டணத்தை சேர்க்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லலித் பாசின் என்ற வழக்கறிஞர், சேவைக்கட்டணம் என்பது உணவக நிறுவனரும், அதில் பணியாற்றும் பணியாளர்களும் சம்மந்தப்படுவது என்றும் இதனை தொழிலாளர் நல அமைப்புதான் இறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஹோட்டல்களில் சேவைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வாடிக்கையாளர் நலத்துறையில் எந்த விதிகளும் இல்லை என்று வாதிட்டார். வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ஒன்றும் பணம் வசூலிக்கவில்லையே என்றும் பாசின் விமர்சித்துள்ளார்.இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் விசாரணைக்கு வர இருக்கிறது.CCPA அமைப்பில் சேவை வரி தொடர்பாக உணவக நிறுவனங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில்தான் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக நீதிபதி பிரதிபா சிங் என்ற நீதிபதி இடைக்கால ஆணை மட்டுமே பிறப்பித்த நிலையில் இந்த வழக்கு மிக முக்கிய கவனம் ஈர்த்திருக்கிறது. விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி FHRAI,NRAI ஆகிய அமைப்புகளுக்கு கடந்த ஜூலையில் தலா 1 லட்சம் ரூபாயை அபராதமாக டெல்லி உயர்நீதிமன்றம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.