ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..
ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகளுக்கு வழங்கப்பட்டும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரெபோ வட்டி விகிதம் என்பார்கள். இந்த வட்டி விகிதம் பொதுமக்களும் தெரிந்துகொள்வது அவசியம்,ஏனெனில் இது உயர்ந்தால் அனைத்து தரப்பு கடன்களின் வட்டிகளும் உயர்ந்துவிடும். இந்த சூழலில் ரெபோ வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூடட்த்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். தொடர்ந்து 4 ஆவது முறையாக ரெபோ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.இதன் காரணமாக ரெபோ வட்டி விகிதம் அறரை விழுக்காடாகவே தொடர்கிறது.24 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5%ஆகவும், 3ஆம் காலாண்டில் 6.0%, 4ஆவது காலாண்டில் 5.7%ஆகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 25 நிதியாண்டின் காலாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 6.6%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியை கபில்தேவ் பாலிசி என்றும் அனைத்து தரப்பினருக்குமான திட்டம் என்றும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். செப்டம்பரில் விலைவாசி உயர்வு குறைந்திருக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட சூழலில் இந்தியாவின் ரெபோ வட்டி விகிதம் கவனம் பெற்றிருக்கிறது.