சிஇஓ தேவை…!!!
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கிருஷ்ணன் அண்மையில் சொந்த காரணங்களுக்காக பதவி விலகினார். 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடக்கும் வங்கிக்கு கிருஷ்ணன் வகித்த பதவி தற்போது காலியாக உள்ளது. இதனை நிரப்புவது தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஒரு தனிப்பட்ட நபர் மூத்த வங்கி பதவியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,சிஇஓவாக 2 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 62 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 22 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மெர்கண்டைல் வங்கியில் டாக்சி ஓட்டுநர் ஒருவரின் வங்கிக்கணக்குக்கு 9ஆயிரம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சொந்த காரணங்களுக்காக கிருஷ்ணன் பதவி விலகினார். 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கணக்கில் வந்த நிலையில் அதனை வங்கியே பின்னர் மீண்டும் திரும்ப எடுத்துக்கொண்டது. வங்கிக்கணக்கில் அதிக தொகை கிடைத்ததும் தனது நண்பருக்கு 21,000 ரூபாயை அந்த வாடிக்கையாளர் அனுப்பினார்., பின்னர் வங்கி தனது தவறை உணர்ந்த நிலையில் வாடிக்கையாளருக்கு கார் லோன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர்.