இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர்..
ஏற்கனவே ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் இடையே நேரிட்டு வரும் போரால் பலநாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக சண்டையிட்டுக்கொண்டு கிடக்கும் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே போர் மூண்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியின் மீது வீசப்பட்டது. இதனால் குண்டுகள் விழும் முன் எச்சரிக்கும் சைரன் ஒளித்துக்கொண்டே இருந்தது. சாலைகளில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது பாராசூட் குழுவினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் பிரிவினர் இஸ்ரேல் மீது கைவைத்துவிட்டு மோசமான தவறை செய்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும்,தேவையில்லாமல் எங்கும் நகரவேண்டாம் என்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
திடீர் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அகதிகளாக சென்றுகொண்டிருக்கின்றனர்.2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் பிரிவினர் களமிறங்கியதில் இருந்து சண்டையானது தொடர்ந்து வருகிறது. பிரபல சுற்றுலாதலமான ஜெருசலேமும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.