சுவற்றில் வீசிய பந்து போல எழும்பிய சந்தைகள்…
அக்டோபர் 10ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. அக்டோபர் 9ஆம் தேதி இந்திய சந்தைகள் வீழ்ந்திருந்த நிலையில், அடுத்த நாள் 566 புள்ளிகள் உயர்ந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66079 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் உயர்ந்து 19689புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது . Coal India, Bharti Airtel, Adani Ports, Hindalco Industries and Adani Enterprises ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. IndusInd Bank, Cipla, Dr Reddy’s Laboratories, TCS ,Asian Paints. ஆகிய நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 4 விழுக்காடு வரை உயர்ந்தன. தகவல் தொழில்நுட்பம், ஆற்றல், ஆட்டோமொபைல், உலகோத்துறை பங்குகள் 2விழுக்காடு வரை உயர்ந்தன.GM Breweries, Zomato, Oil India, L&T Technology Services, ITI, TVS Motor Company, Prestige Estates Projects, Bharti Airtel நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாயும், ஒரு சவரன் 120 ரூபாயும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5380 ரூபாய்க்கும், ஒரு சவரன ்தங்கம் 43,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 75 ரூபாய் 50 காசுகளாகவே உள்ளது. கட்டிவெள்ளி விலை கிலோ75 ஆயிரத்து 500ரூபாயாக விிற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி, மற்றும் செய்கூலி ,சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .