மீண்டு வந்த சந்தைகள்…
அக்டோபர் 11ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 393 புள்ளிகள் உயர்ந்து 66473 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121 புள்ளிகள் உயர்ந்து 19811புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது . Hero MotoCorp, Wipro, Grasim Industries, UltraTech Cement, Dr Reddy’s Laboratoriesஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. HCL Technologies, Adani Ports, SBI, Coal India, TCS.ஆகிய நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. பொதுத்துறை வங்கிகள் தவிர்த்து அனைத்து துறை பங்குகளும் பச்சையில் முடிந்தன.ஆற்றல், ஆட்டோமொபைல், உலகோத்துறை பங்குகள் 1விழுக்காடு வரை உயர்ந்தன.Mishra Dhatu Nigam, Welspun Corp, KPIT Technologies, Sunteck Realty, Ramco Cements, Phoenix Mills, Kalyan Jewellers, eClerx Services, Zomato, TVS Motor Company, Coal India, HDFC Asset Management Company, Ipca Laboratories நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் தங்கம் 8ரூபாயும், ஒரு சவரன் 64 ரூபாயும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5372 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 42,976 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 75 ரூபாயாக உள்ளது. கட்டிவெள்ளி விலை கிலோ 75 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3% ஜிஎஸ்டி, மற்றும் செய்கூலி ,சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் செய்கூலி, சேதாரம், கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனிக்கவும்.