7 பில்லியன் திட்டத்தை காலி செய்யும் முடிவு..?
சிப்லா என்ற பிரமாண்ட மருந்து நிறுவனம் உலகளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும்.இந்த நிறுவனம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் அதிக பங்கு வைத்திருக்கும், யூசூப் ஹமீத் தனது திட்டத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 80 ஆண்டுகளாக மருந்துத்துறையில் கோலோச்சிய நிறுவனம், முழுமையாக வெளியேற இருக்கிறது. ஒரு பங்கின் விலை ஆயிரத்து 200 ரூபாயாக இருக்கிறது. யூசூப்பின் திட்டத்தை அவரின் குடும்பத்தினர் மேலும் தாமதப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமீதின் குடும்ப உறுப்பினர்களான சோபி மற்றும் சமீனா ஹமீது ஆகியோருக்கு இந்த விற்பனையில் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரிடமும் நிறுவனத்தின் 7%பங்குகள் உள்ளன. குஜராத்தைச் சேர்ந்த டொரண்ட் என்ற நிறுவனம் சிப்லா நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதே குடும்பத்தில் ருமானா ஷிரின் உள்ளிட்டோரும் யூசுப்பின் முடிவுக்கு எதிராக உள்ளனர். இதனால் சிப்லா நிறுவனத்தின் விற்பனை காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோய்க்கு இணை மருந்துகளை சிப்லா தயாரித்தபோது 2,000ஆம் ஆண்டில் உலகளவில் கவனத்தை ஈர்த்த நிறுவனம், சொத்து தகராறு மற்றும் புரோமோட்டர்கள் பிரச்சனையால் தனது பங்குகளை விற்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. அமெரிக்காவில் வணிகத்தை அதிகரிக்கும் முயற்சியில் சிப்லா ஈடுபட்ட நிலையில், சிப்லா நிறுவனத்தை விற்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.