HCL நிறுவன ஊழியர்கள் அளவு குறைப்பு..
இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு தரவுகளை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலாண்டில் புதிதாக அந்நிறுவனத்தில் பணியில் சேர்வோரின் எண்ணிக்கை 2299 குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவாலான வணிக சூழலில் இருக்கும் பணியாளர்களை வைத்தே வேலை வாங்க எச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் புதிதாக 3,630 பேர் எச்சிஎல் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். மொத்த எச்சிஎல் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 2,21,139 ஆக உயர்ந்துள்ளது. 24 நிதியாண்டில் புதிதாக 10,000பேரை பணியில் சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் காலாண்டில் பணியாளர்கள் புதிதாக சேரும் அளவு 2506 பேர் குறைந்தது. இது இரண்டாவது காலாண்டாக பணியாளர்கள் புதிதாக சேரும் விகிதம் குறைந்திருக்கிறது.HCLநிறுவனத்தில் இருந்து வெளியேறும் பணியாளர்களின் விகிதமும் குறைந்திருக்கிறது. இரண்டாவது காலாண்டில் மட்டும் 16.3%இல் இருந்து 14.2%ஆக இந்த அளவு குறைந்திருக்கிறது.மொத்தமாக பணியாளர்கள் வெளியேறும் எண்ணிக்கை 23.8% ஆக குறைந்திருக்கிறது. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களிலும் புதிதாக பணிக்கு எடுக்கும் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது. மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1%பணியாளர்கள் குறைந்திருப்பதாக சிஇஓ விஜயகுமார் தெரிவித்துள்ளார். எச்சிஎல் நிறுவனத்தின் பணியாளர்களில் ஜூனியர் மட்டத்தில் இருப்போருக்கு சம்பள உயர்வு 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.92% வருவாய் அதிகரித்திருந்தது. 24 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் 3,833 கோடி ரூபாய் வருாய் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வருவாய் என்பது 8%உயர்ந்து 26,672 கோடி ரூபாயாக உள்ளது.குறைவான பணியாளர்களை வைத்துக்கொண்டு சிறப்பான லாபத்தை ஈட்டும் எச்சிஎல் நிறுவனத்தின் வளர்ச்சி 2ஆவது காலாண்டில் 18.5% ஆக உயர்ந்திருக்கிறது.