போரால் உயர்ந்து முடிந்த கச்சா எண்ணெய் விலை…
இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேநடந்து வரும் போர், காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 6% வரை உயர்ந்திருக்கிறது.இது கடந்த பிப்ரவரிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் சண்டையானது பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு தகுந்தபடிதான் ஹமாஸ் போர் இருக்கும் என்று ஈரான் அண்மையில் தெரிவித்திருந்தது. இதுவும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தினசரி வர்த்தகத்தில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை என்பது 91 டாலர்களாக உயர்ந்திருக்கிறது.இது பழைய விலையை விட 5.8% உயர்வாகும்.அமெரிக்க கச்சா எண்ணெய் ஒரு டாலர் 87 டாலராக இருக்கிறது.இஸ்ரேல் -பாலஸ்தீன போர் தொடங்கிய நேரத்தில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக தொடங்கவில்லை. ஏனெனில் இருநாடுகளிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாக இல்லை. ஆனால் போர் தீவிரமடைந்த நிலையில் இரு நாடுகளுக்கும் ஆதரவாக பல உலக நாடுகளும் அணி சேர்ந்துள்ளன. குறிப்பாக ஈரான் ஹமாஸுக்கு ஆதரவு அளிப்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்விலையை உயர்த்தியுள்ளது.அமெரிக்கா அதிகளவில் கச்சா எண்ணெயை பதுக்கி வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 10.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளது. இதுவும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர முக்கிய காரணமாகும்.