பிஎம்டபிள்யூ அட்டகாச திட்டம்..
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனையாகும் 4-ல் 1 கார் மின்சார காராக இருக்கும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த வகை கார்களுக்கான வாடிக்கையாளர்கள் தேவை கணிசமாக உயர்ந்திருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்திய தலைவரும் சிஇஓவுமான விக்ரம் பவா இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேட்டி அளித்தார். இந்தியாவில் தங்கள் மின்சார கார்கள் பங்களிப்பு தற்போது 10%ஆக இருப்பதாகவும்,இந்த விகிதம் அடுத்தாண்டு 15%ஆக உயரும் என்றும்,2025-ல் 25%ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பிஎம்டபிள்யூவில் 5 வகையான மின்சார கார்கள்(i4, i7, iX, iX1,Mini Electric) இருப்பதாகவும்,வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விக்ரம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில்விற்கப்படும் சொகுசு மின்சார கார்களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் மட்டும் 48%பங்களிப்பை செய்கிறது.வால்வோ கார்ஸ்,மெர்சீடீஸ் பென்ஸ்,ஆடி ஆகிய கார்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் அண்மையில் பிஎம்டபிள்யூ தனது ஆயிரமாவது மின்சார காரையும் இந்தியாவில் விற்பனை செய்தது.2025ஆம் ஆண்டுக்குள் 12 வகையான மின்சார கார்களை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 1,439 BMWகார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக BMWநிறுவனம்,11,981 கார்களை விற்றுள்ளது.இது கடந்த 2018-ல் 10,405 கார்கள் விற்ற சாதனையைவிட அதிகமாகும்.சொகுசு இருசக்கர வாகனங்கள் விற்பனையிலும் BMWநிறுவனத்தின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் 26%உயர்ந்து 6778 BMW பைக்குகள் விற்கப்பட்டுள்ளன.
BMW X7, BMW 7 series, BMW iX, BMW XM ஆகிய விலையுயர்ந்த கார்கள் விற்பனை இந்தியாவில் உயர்ந்திருக்கிறது.நடப்பாண்டில் மட்டும் 19 கார்கள் மற்றும் 3விலையுயர்ந்த ரக மோட்டார் சைக்கிள்களை இந்தாண்டே சந்தை படுத்தும் பணிகளிலும் BMW தீவிரமாக ஈடுபட்டுள்ளது