7 பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பு..
வங்கிகளுக்கு NPA என்பது பெரிய தலைவலியை தரும் முக்கிய பிரச்சனையாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் பல முறைநினைவூட்டியும் 90 நாட்களுக்கும் மேல் பணம் தராமல் இழுக்கடிக்கும் வாராக்கடனின் பெயர்தான் NPA.பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா,பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 7 பொதுத்துறை வங்கிகளில்தான் இந்த வாராக்கடன் கணிசமாக உள்ளதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாராக்கடன் 24 நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.98%ஆக உயர்ந்துள்ளது.பொதுத்துறை வங்கிகளிலேயே அதிக வாராக்கடன் உள்ள பட்டியலில் PNB வங்கிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மூலதனம் 82,802கோடி ரூபாயாக உள்ளது.
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி உள்ளது. இதில் வாராகக்கடன் 1.95% ஆக உள்ளது.பிஎஸ்பி வங்கியின் சந்தை மூலதனம் 29,246 கோடி ரூபாயாக உள்ளது. பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் விகிதம் 1.65%,வங்கி சந்தை மூலதனம் 43,867கோடியாக உள்ளது.யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் விகிதம் 1.58%, சந்தை மூலதனம் 76,274 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக்கடன் விகிதம் 1.44%ஆக இருக்கிறது. இந்த வங்கியின் சந்தை மூலதனம்81,753கோடி ரூபாய்.பேங்க் ஆஃப் பரோடா வின் வாராக்கடன் விகிதம் 0.78% ஆக உயர்ந்துள்ளது. இந்த வங்கியின் சந்தை மூலதனம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 237 கோடிரூபாயாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் 0.71%ஆக உயர்ந்துள்ளது.இந்த வங்கியின் சந்தை மூலதனம் 5.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.