சீனாவுக்கு மேலும் பேரிடி..
ஜெப்ரீஸ் அனலிஸ்ட்ஸ் என்ற நிறுவனம் சீனாவின் உண்மையான பொருளாதார நிலை குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் மொத்த உற்பத்தியில் ஆப்பிள் ஐபோன் இனி பெரும்பங்கு வகிக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன்களுக்கு மாற்றாக ஹுவாவே நிறுவன போன்கள் முதலிடத்தை பிடித்திருக்கிறதாம்.
சீன நிறுவனத்தின் விற்பனை சீனாவில் இரண்டு இலக்கங்களாக உள்ளன.சீனாவில் அந்நாட்டு போன்களுக்கு மட்டுமே மவுசு இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை இரண்டு இலக்கங்களில் குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஐபோன் சந்தைகளை,ஹூவாவே நிறுவன சந்தை மிஞ்சிவிடும் என்றும் ஜெஃப்ரீஸ் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. சீன சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 5-ல் ஒரு பங்காக உள்ளது. சீனாவில் ஐபோன்களுக்கு பெரிய அளவு மக்கள் மத்தி மவுசு குறைந்தவிட்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மார்கன் ஸ்டா்னலி நிறுவனமும் சீனாவில் இருந்து ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.