டிசிஎஸ் அலப்பறை இது..
டீ விளம்பரத்தில் வருவதைப்போல டிசிஎஸ் எம்ப்ளாயிஸ் புலம்ப ஆரம்பிச்சாச்சு..கொரோனா சூழல் முடிந்து, வாரத்தில் 5 நாளும் ஆபிசுக்கு போயே ஆக வேண்டும். இந்த நிலையில் பல புதிய பணியாளர்களுக்கு வாரத்தில் 5 நாட்களும் ஆபிஸ் வருவதே ஒரு பெரிய புதிய அனுபவத்தை தந்திருக்கிறது. புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்களுக்கு எப்படி நாகரீகமாக உடையணிய வேண்டும் என்ற சிறு சிறு நுணுக்கங்களைகூட டிசிஎஸ் கற்றுத்தந்துள்ளது. பலபேர் டி-சர்ட்டிலேயே வீட்டில் இருந்து பணியாற்றிவிட்ட நிலையில், அலுவலகத்துக்கு எப்படி வரவேண்டும் என்ற விதியே மறந்துவிட்டனர்.இந்த சூழலில் மூத்த மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கார்ட் அனைத்து பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அளித்துள்ளார். அதில் டிசிஎஸில் பணியாற்ற ஒரு தனி உடை கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளார். ஒரு பணியாளரின் உடை கூட உலகளவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் என்று குறிப்பிட்டுள்ளார். டக் இன் செய்யும் வகையிலான உடைகள், ஃபார்மல் உடையில் வாரத்தில் வியாழக்கிழமை வரை வரவேண்டும் என்று கூறியுள்ள லக்கார்ட், வெள்ளிக்கிழமை மட்டும் அரைகை சட்டை அதுவும் நாகரீகமான டீஷர்ட் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கும் நாகரீகமான, ஸ்டைலான உடைகள் இருப்பதை டிசிஎஸ் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அலுவலகம் எப்படி இருக்கும் என்றே தெரியாமல் 2-3 ஆண்டுகளாக வீட்டில் ஹாயாக வேலை பார்த்தவர்களை திடீரென டக்கின் செய்யச் சொல்வதும் பணியாளர்களை ஒருவித சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.