அம்பானிக்கு உதவும் வெளிநாட்டு வங்கி..
ஆசியாவிலேயே பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் முகேஷ் அம்பானி, இவர் கால்வைக்காத வணிகமே இல்லை என்ற அளவுக்கு அனைத்திலும் ஒரு கை பார்த்துள்ளார். இந்த நிலையில்,முகேஷ் அம்பானியின் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு HSBCநிறுவனம் நிதி அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. லண்டனை மையமாக கொண்டு இயங்கும் அந்த வங்கி 73 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளிக்க HSBCநிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டோக் பார்க் எஸ்டேட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ரிலையன்ஸ் அண்மையில் வாங்கியது. இதனையடுத்து அந்த நிறுவனத்துக்கு இப்போது HSBC கடன் உதவி அளிக்க முன்வந்துள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு செட் அமைத்த முக்கியமான சில இடங்களும் தற்போது அம்பானி வசம் வந்துள்ளது. லண்டனில் குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம் இருந்த பகுதியில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, பார்க்கிங் வசதியும் செய்யப்பட இருக்கிறது. 66 வயதாகும் முகேஷே் அம்பானி,உலகளவில் 11ஆவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். HSBC நிறுவனத்துக்கும் அம்பானிக்கும் இடையே பல ஆண்டுகளாக வணிக உறவுகள் உள்ளன.2019ஆம் ஆண்டு ஹாம்லீஸ் என்ற பொம்மை நிறுவனத்தை அம்பானி நிறுவனம் வாங்கியது. five-star Mandarin Oriental New York hotel நிறுவனத்தை முகேஷ் அம்பானி வாங்கியிருக்கிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களை எடுத்த செட்கள் இருந்த இடத்தை அம்பானி வாங்கிய நிலையில் உளகளவில் அம்பானியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.