பேபி பவுடர் நிறுவனத்துக்கு வந்த சிக்கல்…
பால் போன்ற அழகு சருமம் கொண்ட குழந்தைகளுக்கு பெற்றோர் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது பேபி பவுடர்களைத்தான். இதில் முக்கிய இடம் வகிப்பது ஜான்சன் அன்ட் ஜான்சனின் பேபி பவுடரைத்தான். இந்த பவுடர் பயன்படுத்தினால் கேன்சர் வரை வருவதாக அதிர வைத்துள்ள அறிவிப்புகளால் திக்குமுக்காடிப்போயுள்ளது ஜேஅண்ட்ஜே நிறுவனம். 8.9பில்லியன் ரூபாய் மதிப்புள்ள திவால் நோட்டீசுகளையும் அந்நிறுவனம் எதிர்கொள்ள இருக்கிறது.வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பெரிய தொகையை கொடுத்து பிரச்னையை சுமூகமாக முடிக்கவே அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூலையில் நியூஜெர்சியைச் சேர்ந்த நீதிபதி இரண்டாவது திவால் நோட்டீசையும் ரத்து செய்து ஆணையிட்டார். மொத்தம் 8.9பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு கேட்டு 40,000க்கும் அதிகமானோர் வழக்குகளை தொடுத்துள்ளனர். உலகில் லாபம் கொழிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஜே அண்ட் ஜே நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்திருப்பது ஏற்க முடியாது என்றும், 51,000 வழக்குகள் புற்றுநோய் தொடர்பாக பதியப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அடுத்த 6 மாதங்களில் இந்த வழக்குகளில் பெரும்பாலனவை விசாரணைக்கு வர இருக்கின்றன. வீடுகளின் கூரைகளில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் பொருளும் இந்த பவுடரில் இருப்பதாகவும் புகார்கள் குவிந்தன. நியூ ஜெர்சியை சேர்ந்த நிறுவனம் தனது விற்பனை கடைகளில் ஜான்சன் பேபி பவுடர்களை 2020 முதல் விற்பனைக்கு வைப்பதில்லை என்ற அறிவிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்னைகளை முடிக்க 10 பில்லியன் டாலர் தொகையை பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கவும் பேபி பவுடர் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்களில் பெரும்பாலானோரின் வக்கீல்கள் செட்டில்மண்டை விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.