விழுந்து சிதறிய சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் அக்டோபர் 19 ஆம் தேதி பெரிய சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 248புள்ளிகள் குறைந்து 65,629 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46 புள்ளிகள் குறைந்து 19,624 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. துவக்கத்தில் தடுமாறத் தொடங்கிய பங்குச்சந்தைகள், கடைசி வரை சரிந்தே முடிந்தன.பிற்பாதியில் நடந்த வர்த்தகம் சரிவை ஓரளவுக்கு சமாளித்தது.
Wipro, Tech Mahindra, UPL, Bharti Airtel, Hindalco Industriesஉள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. Bajaj Auto, LTIMindtree, Nestle India, Hero MotoCorp,UltraTech Cementஉள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.
ஆட்டோமொபைல் துறை பங்குகள் மட்டும் அரை விழுக்காடு உயர்ந்தன. வங்கி,ஆற்றல்,ரியல் எஸ்டேட்,மருந்து,உலோகம் உள்ளிட்ட துறை பங்குகள் 0.3 முதல் 0.9விழுக்காடு சரிவை கண்டுள்ளன. Minda Corp, NBCC (India), Bajaj Auto, Welspun India, Nestle India, Hero MotoCorp, Firstsource Solution, Ashoka Buildcon, Suzlon Energy, Colgate Palmolive உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்ச அளவை எட்டின.