2 சான்ட்விச்சுக்காக வழக்கா?
சிட்டி வங்கி உலகளவில் மிகவும் லாபகரமான பழமையான வங்கியாகும். இந்த வங்கியின் ஊழியர் ஒருவர் விசித்திர காரணத்துக்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். Szabolcs Fekete என்ற அந்த பணியாளர் சம்பந்தமே இல்லாமல் தம்மை நிறுவனம் வேலையை விட்டு தூக்கியதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்குக்கு பதில் அளித்துள்ள வங்கி நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியர் அவர் சாப்பிட்ட 2 சான்ட்விச் மற்றும் அவரின் பார்ட்னர் சாப்பிட்ட காபிக்கு வங்கி நிறுவனத்தின் கணக்கில் சேர்த்துள்ளார் என்றும், பொய் சொன்னதால் அவரை வேலையை விட்டு நீக்கியதாக கூறியிருக்கிறது சிட்டி வங்கி நிறுவனம். 7 ஆண்டுகள் பணியாற்றிய Fekete, வணிக பயணத்தின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்தாண்டு நடந்த இந்த வங்கி தொடர்பான பிரச்னையில் வங்கியின் பதில் மனு இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது. வெறும் 100 பவுண்ட் செலவுக்காக ஒரு வழக்கு, அந்த வழக்கிலும் வங்கி நிறுவனம் அலட்சியமாக இல்லாமல், மிகச்சரியாக கண்டிப்புடன் நடந்துகொண்ட விதம் உலகளவில் பெரிய கவனம் பெற்றிருக்கிறது. அலுவலக ரீதியில் பணிக்கு சென்றுவிட்டு, சொந்த செலவுகளை அலுவலக காரணத்துக்காக கணக்கில் சேர்ப்பதை ஏற்க முடியாது என்றும் சிட்டி வங்கி கூறியுள்ளது. தொடர் தவறான நடவடிக்கைகளால் சம்பந்தப்பட்ட நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் சிட்டி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இதனை கேட்ட நீதிபதி இந்த வழக்கு பணம் தொடர்பானது இல்லை என்ற போதும்,நிறுவனத்தில் வெளிப்படையாக பணியாளர் நடந்து கொள்ளவில்லை என்றும் கடுமையாக சாடினார்.