5 துணை நிறுவனங்களை இணைக்கும் பிரபல நிறுவனம்..
பெங்களூரூவை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது பிரபல நிறுவனமான விப்ரோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் ஏராளமான துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 உப நிறுவனங்கள் தற்போது தாய் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. Wipro HR Services, Wipro Overseas IT Services, Wipro Technology Product Services, Wipro Trademarks Holding மற்றும் Wipro VLSI Design Services ஆகிய 5 நிறுவனங்களை இணைப்பது குறித்து இயக்குநர்கள் குழு கூட்டம் புதன் கிழமை நடந்தது. இதில் செப்டம்பர் வரையிலான காலாண்டு வருமானம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இணைக்கும் முடிவு குறித்து தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதலும் அளிக்க இருக்கிறது. வணிக செயல்பாடுகளை ஒன்றிணைப்பது. நிர்வாக,மேலாண்மை மற்றும்இதற செலவினங்களை குறைப்பதே இதன் நோக்கமாக கூறப்படுகிறது.மேலும் சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்ககுள் வைத்திருப்போருக்கு எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. Wipro Overseas IT Services நிறுவனம் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வருமானமே இல்லாமல் இயங்கி வருகிறது.
Wipro HR Services நிறுவனம் 67,753கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. Wipro Technology Product Services 85.3கோடி ரூபாயும்,Wipro VLSI Design நிறுவனம் 218கோடி ரூபாயும்,Wipro Trademarksநிறுவனம் 29 லட்சம் ரூபாயும் வருமானம் பார்த்திருக்கின்றன. மொத்தம் 2,667 கோடி ரூபாய் வருமானம் என்பது 0.70%உயர்வாகும். செயல்பாட்டு வருமானம் என்பது 22,515 கோடி ரூபாயாக இருக்கிறது.இது 0.1% அதிகமாகும். 22 கணக்குகளில் இரண்டாவது காலாண்டில் 100 மில்லியன் டாலர்களாக இருந்ததாகவும், வரும் டிசம்பரில் முடியும் காலாண்டில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் வருமானம் 2,617 மில்லியன் டாலரில் இருந்து 2672 மில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.