நண்பன் பங்கு 40%…
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கச்சா எண்ணெய் அளவு என்பது பெரும்பாலும் ரஷ்யாவை சுற்றியே இருந்து வருகிறது. 2023-24 நிதியாண்டின் முதல் பாதியில் மொத்தம் 5 பங்கு கச்சா எண்ணெய் பெறப்பட்டது என்றால் அதில் 2 பங்கு ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியாவுக்கு கிடைக்கிறதாம். உலகளவில் கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு 3 ஆவது இடம் உள்ளது. மத்திய தரைகிழக்கு நாடுகள் ரஷ்யாவிடம் அழுத்தம் தந்து இருப்பதிலேயே கடுமையான காலகட்டத்தில் இந்தியா குறைந்தவிலையில் நண்பனின் நாடான ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது. கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில் அண்மையில் சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் நாடு தடை விதித்திருந்தது. ரஷ்யாவிடம் இருந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையுள்ள காலகட்டத்தில் ,ஒரு நாளைக்கு இந்தியா 17லட்சத்து 60 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது.இது கடந்தாண்டு இருந்த அளவைவிட இரட்டிப்புக்கும் அதிகமாகும். ஜூலை முதல் ஆகஸ்ட்டில் இந்த எண்ணெய் அளவு 15லட்சத்து 40 ஆயிரமாக குறைந்தது.ommonwealth of Independent States நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு அஜர்பைஜான, கஜகஸ்தான், ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 43%கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறதாம். ஓபெக் நாடுகளிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயின் பங்கு கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளில் இவ்வளவு குறைவாக கச்சா எண்ணெயை ஓபெக் நாடுகளிடம் இருந்து இந்தியா குறைவாக வாங்கியதில்லை.