ஒலிம்பிக்-இது கோடிகளின் விளையாட்டு..
ஒலிம்பிக் போட்டிகள் என்பது வெளியில் இருந்து பார்த்தால் சாதாரணமாக தெரியலாம். அதற்கு பின்னால் தெளிவான திட்டமிடல், பெரிய பண செலவும் இருக்கும். இந்த நிலையில்தான் இந்தியா 2036 ஒலிம்பிக்கை நடத்த இசைவு தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி 2029 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் மோடி விருப்பம் தெரிவித்தார்.
2036 ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்துவதற்கு போலந்து,இந்தோனேசிய உள்ளிட்ட நாடுகளும் எங்கள் நாட்டில் வந்து போட்டிகளை நடத்துங்கள் என்று போட்டிக்கு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது ஒரு சாதாரண காரியமல்ல, ஒலிம்பிக் கமிட்டி கேட்கும் அனைத்து தகுதிகளும் இருந்தால் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.மிகச்சிறப்பான விளையாட்டு உபகரணங்களையும், கட்டமைப்பையும் வலுப்படுத்த2036 ஒலிம்பிக் அமைய இருக்கிறது. 5 பில்லியன் முதல் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பணம் செலவழிக்க வேண்டி வரும்.ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த போட்டிக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் செலவானது.மேலும் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு போட்டிகளுக்கு ஆன செலவை விட ரயில்கள்,சாலைகள் அமைக்க ஆன செலவுதான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். இவை தவிர்த்து பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றியும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாட்டின் பொருளாதாரம் கணிசமாக வளரும் என்ற ஒற்றை புள்ளியே தற்போது 2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. பாரிசில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியால் 10.7பில்லியன் யூரோ வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டரை லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பையும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் அளிக்க உள்ளன. பல நல்ல அம்சங்கள் இருந்தபோதிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இருக்கும் நாட்டுக்கு பல ஆண்டுகள் கடன்சுமை அதிகரிக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்தியாவின் முயற்சி ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கும் நிலையில்,அதனை செயல்படுத்த இன்னும் 13 ஆண்டுகள் இருப்பதற்கு ஏன் இத்தனை அவசரம் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.