ஆசியாவிலேயே பெரிய கடன்காரர் அதானி..?
எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் தோல்வியை கூட சந்திக்காமல் வளர்ந்திருக்கலாம் ஆனால் கடன் இல்லாமல் வளர்ந்தோரின் விகிதம் மிகமிக சொற்பம் என்றே சொல்ல வேண்டும். ஏன் இத்தனை பில்டப் என நீங்கள் கேட்கலாம் விஷயம் இருக்கு பாஸ்.. அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்க அதானி பெரிய கடனை வாங்கியிருந்தார். தற்போது அதனை அடைக்க 3.5பில்லியன் டாலர் கடனை வாங்க ஓடிக்கொண்டிருக்கிறார். ஆசியாவில் இதுவரை வாங்கியதிலேயே மிகப்பெரிய 10 கடன்கள் பட்டியலில் அதானி இப்போது வாங்கப்போகும் கடனும் ஒன்றாக உள்ளது. 450முதல் 500அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் அதானி கடன் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3தவணைகளாக இந்த தொகை கைமாற்றம் நடைபெற இருக்கிறது. முதல் தொகை 6 மாதத்துக்குள்ளும், இரண்டாவது தவணை 18மாதங்கள்,3-ஆவது தவணை 3 ஆண்டுகளுக்குள் என 3 தவணைகளாக இந்த பெருங்கடன் தரப்பட இருக்கிறது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் முன்வைத்த புகார்களுக்கு மத்தியில் வங்கிகளிடம் கடன் கேட்டு அதானி பேச்சுவார்த்தை நடத்தினார். கிட்டத்தட்ட கடன் கிடைப்பது உறுதியாகியுள்ளது.எந்த வங்கியில் எவ்வளவு வாங்கப்போகிறார்கள் என்பது ஓரிரு வாரங்களில் இறுதியாகிவிடும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.ஏற்கனவே கடந்த ஜூலையில் 151 மில்லியன் டாலர் கடனை அதானி குழுமம் பாண்டுகளை வெளியிட்டு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.