ஆப்பிள் முதலீட்டாளர்கள் கலக்கம்..
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பனிப்போர் நீடித்து வரும் சூழலில் ஆப்பிள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது.சீனாவில் ஐபோன்களின் விற்பனை படுத்தேவிட்டது என்று கூறும் அளவுக்கு மக்கள் ஐபோன்களை தவிர்த்து வருகின்றனர். 2001ஆம் ஆண்டு சரிவுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் சந்திக்கும் மிகமோசமான ஆண்டாக இந்த ஆண்டு மாறும் சூழல் உருவாகியுள்ளது.புதிய ஐபோன்களில் சில அதிக சூடாவதாக எழுந்த புகாரும் ஆப்பிளின் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி சரிவு மற்றும் அதிக விலை உள்ளிட்ட அம்சங்கள் முதலீட்டாளர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறது. ஜூலை மாத இறுதியில் இருந்து இப்போது வரை ஆப்பிள் நிறுவன பங்குகள் 10%க்கும் மேல் சரிந்திருக்கிறது.நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் இந்த காலகட்டத்தில் 4.8%குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 330 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் 4ஆவது காலாண்டு முடிவுகள் நவம்பர் முதல்வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டை ஒப்பிடுகையில் ஆப்பிளின் வருவாய் 1%வரை குறைய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.2024 காலகட்டத்தில் ஆப்பிளின் வளர்ச்சி லாபமாக மாறவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் புரோ ஹெட்செட் அடுத்தாண்டுதான் சந்தையில் கிடைக்கும் என்பதால் அதுவரை ஆப்பிளின் பெரிய வளர்ச்சி எதுவும் இருக்காது என்பதால் முதலீட்டாளர்கள் அதிகம் யோசிப்பதாக பன்னாட்டு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவை தவிர சில சர்வதேச நிகழ்வுகளும் நடந்துள்ளன. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பங்குகள் 18%வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. டெஸ்லா நிறுவனம் கடன் அதிகரிப்பு, தாய்வான் சிப் தயாரிக்கும் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள்,யூடியூபில் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி அறிமுகம் ஆகியன உலகளவில் நடக்கும் மற்ற முக்கிய நிகழ்வுகளாக இருக்கின்றன.