இஸ்ரேலின் கடன் ரேட்டிங் சரிவு..?
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே சண்டை கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மூடீஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் இஸ்ரேலின் கடன் ரேட்டிங்க் அளவை குறைத்திருக்கிறது. போருக்கு முன்பு வரை இஸ்ரேலின் நிதி நிலை சீராக இருந்ததாக மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால் நீண்டகால சண்டை நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும்,இதனால் அந்த நாட்டின் நிதிநிலை மோசமடைய இருக்கிறதாம். இதேபோல் ஃபிட்ச் நிறுவன அறிக்கையும் இஸ்ரேலுக்கு பாதகமாக ரேட்டிங் வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் நீடித்து வந்தாலும் அப்போது இல்லாத நிதி நெருக்கடியை இஸ்ரேல் தற்போது சந்தித்து வருகிறது. நீதித்துறையில் நடத்த இருந்த சீர்திருத்தத்தால் அந்நாட்டு நிதி நிலை சற்று ஆட்டம்கண்டிருந்த நிலையில் தற்போது புதிய தலைவலியாக இஸ்ரேலுக்கு போர் அமைந்திருக்கிறது. மூடீஸ் நிறுவனம் கடந்த ஏப்ரலில் ரேட்டிங்கை சாதகமாக அளித்திருந்தது.இஸ்ரேலிய பத்திரங்கள் அண்மையில் ஹமாஸ் நடத்திய தாக்குதலால் 70 அடிப்படை புள்ளிகள் வரை மதிப்பு குறைந்தது. மூடிஸ் நிறுவன ரேட்டிங்க் குறைந்திருப்பதால் இஸ்ரேலின் பண மதிப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.