இலங்கை அரசின் அசத்தல் அறிவிப்பு..
வரும் மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தியாவில் இருந்து ரஷ்யா,சீனா,தாய்லாந்து,மலேசியா,இந்தோனேசியா,ஜப்பான் நாடுகளுக்குத்தான் பலரும் பயணம் செய்வது வழக்கம் ஆனால் புதிய அறிவிப்புகளால் இலங்கையை மக்கள் தேர்வு செய்வார்கள் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அந்நாட்டில் சுற்றிப்பார்க்க 6 முக்கிய இடங்கள் இருக்கின்றன. சிகிரியா என்ற பகுதியில் டிரெக்கிங் செல்ல உகந்த சூழல் உள்ளது.இதேபோல் மிரிசா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதிகளும் சுற்றுலாபயணிகளை வெகுவாக ஈர்க்க இருக்கின்றன. இதேபோல் அனுராதபுரா என்ற பகுதியில் உலகின் பழமையான மரங்கள் உள்ளன.இந்த பகுதியில் சைக்கிளிங் செய்வது அலாதி பிரியத்தை அளிக்கும். Uda Walawe National Parkஎன்ற பகுதியும் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகும்.கிழக்கு ஆப்ரிக்காவில் இருப்பதைப்போலவே இந்த தேசிய பூங்கா காட்சியளிக்கும்.புல்வெளிகள்,காடுகள் என பசுமையான இடங்கள் இங்கு உள்ளன. Negombo என்ற இடமும் சுற்றிப்பார்க்க சிறந்த இடமாகும்.இதேபோல் டெல்ஃப்ட் தீவிலும் சுற்றுலா பயணிகள் அதிக நேரத்தை செலவிடமுடியும். இங்குள்ள,கோட்டை, அனுமன் காலடித்தடம்,புறாக்கூண்டுகள்,இந்த தீவில் உள்ள வரலாறை உள்ளூர் மக்கள் வியப்புடன் கூறுவதை கேட்கலாம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பயண செலவும் மிகவும் குறைவாகும். இந்த மழைக்காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா செல்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.