2.95 லட்சம் கோடி நஷ்டம்..!!!
அக்டோபர் 26ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் பெரிய சரிவை சந்தித்தன. இது தொடர்ந்து 6 ஆவது நாளாக நடக்கும் வீழ்ச்சியாகும். மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் இந்தியாவில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. . இதன் பாதிப்பு இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து, 63,148 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 264 புள்ளிகள் சரிந்து 18,857 புள்ளிகளாக வணிகம் நிறைவுற்றது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 2.95 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. சந்தை மூலதன மதிப்பு 306.27 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் 17.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வீணாகியுள்ளது. உலோகத்துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன. Axis Bank, Adani Ports, Power Grid, HCL Tech நிறுவன பங்குகள் மட்டுமே லாபத்தை சந்தித்தன. மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவன பங்குகள் 4%வரை சரிந்தன. Bajaj Finance, Asian Paints,UPL ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5700 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 45ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு,50 காசுகள் உயர்ந்து 78 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்துது 78ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும். இவற்றில் ஜிஎஸ்டி நிலையானது. ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.