“10% கார்கள் விற்கப்படும்”
இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுசுக்கி நிறுவனம் உள்ளது.இந்த நிறுவனத்தின் தலைவராக ஆர்.சி.பார்கவா இருக்கிறார்.இவர் அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் 10% கார்களை விற்றுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 24 நிதியாண்டின் முதல் பாதியில் பயணிகள் வாகன விற்பனை மற்ற நிறுவனங்கள் 5.5%என்ற அளவில் விற்று வருகின்றனர். ஆனால் மாருதி சுசுக்கியின் விற்பனை 6.6%ஆக உள்ளது. மாருதி சுசுக்கி நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டில் லாபம் 3 ஆயிரத்து 716 கோடி ரூபாயாக இருந்தது. 3ஆயிரத்து 40 கோடி ரூபாய் லாபம் வரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மொத்த விற்பனை அதிகரித்துள்ளது., 2ஆவது காலாண்டின் வருவாய் மட்டும் 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது.இது முந்தய ஆண்டைவிட 29%அதிகமாகும்.கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்த செமி கண்டக்டர்கள் உற்பத்தி தற்போது சீரடைந்திருக்கிறது. காத்திருப்பு காலம் குறைந்திருப்பதாக கூறியுள்ள் பார்கவா,இந்த நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும்,10லட்சத்து 50ஆயிரம் வாகனங்களை மாருதி சுசுக்கி நிறுவனம் விற்றுள்ளது. 20 லட்சம் கார்கள் உற்பத்தி நடந்திருக்கிறது. உள்நாட்டிலேயே 18 லட்சம் வாகனங்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 2லட்சத்து 59 ஆயிரம் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 25 நிதியாண்டில் தனிநபர் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறிய ரக கார்களின் அறிமுகம் அதிகமாக வேண்டும் என்றும் பார்கவா கூறுகிறார். ஹைப்ரிட் ரக கார்கள் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாருதி சுசுக்கியின் ஒரு பங்கின் விலை 10,803 ரூபாயாக இருக்கிறது.