அம்பானிக்கு கொலை மிரட்டல்..
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.அக்டோபர் 27ஆம் தேதி அம்பானிக்கு இந்த மெயில் சென்றுள்ளது. 20 கோடி ரூபாய் பணத்தை தரவில்லை என்றால் சுட்டுக்கொன்றுவிடுவதாகவும் அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 387,506(2)ஆகிய உட்பரிவுகளில் மும்பை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கம்தேவி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வருவது முதல்முறையல்ல.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு கடந்தாண்டு அழைத்த நபர் ஒருவர், அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 2021 பிப்ரவரியில் அம்பானியின் வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் கார் ஒன்றும் நிறுத்தப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.