வங்கிப்பணிகளில் புதிய விதிகள்..?
அரசாங்க மேற்பார்வையில் நேரடியாக இருக்கும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளன.. அதாவது புதிய விதிகளின்படி வங்கிகளில் பணியாற்றும் பழைய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15% சம்பள உயர்வு அளிக்க இசைவு தெரிவிக்கப்பட்டது. வாரத்தில் வெறும் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் வகையிலும் புதிய மாறுபாட இருக்கிறது. ஏற்கனவே பிஎன்பி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நல்ல லாபத்தை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் புதிய சம்பள உயர்வு குறித்து மத்திய அரசு நெருக்கமாக கண்காணித்து வருகின்றன. அடுத்தாண்டு பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் சம்பள உயர்வு அளித்தால் வங்கி பணியாளர்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் அது குறித்தும் மத்திய அரசி பரிசீலித்து வருகிறது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்துக்கு நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் தர உள்ளது.70விழுக்காடுக்கும் அதிகமான அளவு வங்கி பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. டிஜிட்டல் வங்கிக் கிளைகள் வெறும் சேவை மையங்களாகவே இருக்கின்றன. தற்போது வரை முதல்,இரண்டாவது மற்றும் 3ஆவது சனிக்கிழமைகளில் சில வங்கிகள் இயங்குகின்றன. இரண்டு மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையாகவும் உள்ளன. 2015ஆம் ஆண்டுக்கு முன்பு 6 நாட்களாக இருந்த வங்கி பணிகள், அதன்பிறகு 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.