வாரத்துக்கு இவ்ளோ கம்மியா வேலை செய்கிறோமா?
இந்தியா முன்னேற வேண்டும் என்றால் மக்கள் குறிப்பாக இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி மத்திய அரசு தரவுகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.Periodic Labour Force Survey என்ற புள்ளிவிவரம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் சராசரியாக கடந்த 2018ஆம் ஆண்டு 52.6 மணி நேரம் வேலை பார்த்ததாகவும்,இது தற்போது 42.5 மணி நேரமாக குறைந்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பிட்ட இந்த அளவுகள் என்பது குறிப்பிட்ட இந்த அமைப்பால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2018 ஆம் ஆண்டும், இதேபோல் 2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தையும் ஒப்பிட்டுள்ளது. இதன் தரவுகளின்படி இந்தியர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உழைத்த நேரத்தைவிட சற்று குறைந்திருப்பது உண்மைதான் என்று தெரிய வந்திருக்கிறது. இதனை சுட்டிக்காட்டிதான் நாாரயணமூர்த்தி பேசியிருப்பார் போல என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு பிரிவினர் நாராயணசாமி கூறியிருப்பதில் என்ன தவறு என்றும் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். 8 மணிநேரம்தான் ஒரு நாளில் மனிதன் வேலை பார்க்கவேண்டும் என்று லேபர் லா எனப்படும் சட்டம் உள்ளது. இது அப்பட்டமான விதிமீறல் இல்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.