போதுமான பணம் இருக்கு !!!
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வைத்தியநாதன் திகழ்கிறார்.இவர் தனது வங்கி குறித்து நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.அதில் குறிப்பிட்டுள்ள வைத்தியநாதன், தங்கள் நிறுவனத்தின் கோர் மாடல் மிகவும் வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். மிகவும் பாதுகாப்பான விளையாட்டாக வியாபாரத்தை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒரு வங்கியின் வருவாய் மற்றும் டெபாசிட் ஆகிய இரண்டும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர்,ஒரு வங்கியின் மிக முக்கிய மூலப்பொருட்கள் இவை இரண்டும்தான் என்று கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தில் டெபாசிட் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் டெபாசிட் 44% உயர்ந்திருப்பதாகவும், தங்கள் பாதை மிகவும் தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய 4 வங்கிகளின் டெபாசிட் தொகை 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் தங்கள் நிறுவன டெபாசிட் 1லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முதல் 3-4.5 ஆண்டுகளில் ரிப்பேர் காலகட்டத்தில் வங்கி இருந்ததாகவும், லோன் 24-25% வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும், கடன் திட்டத்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வாராக்கடன் விகிதம் 2%ஆக இருப்பதாக கூறியுள்ள அந்த வங்கி அதிகாரிக குறிப்பிட்டார். கூடுதல் பாதுகாப்பு உணர்வுடன் தங்கள் வங்கி இயங்குவதாகவும் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.