இஸ்ரேல்-ஹமாஸ் போரால் ரிலையன்சுக்கு பாதிப்பா..?
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு இந்தாண்டு இரண்டாவது பாதியில் கடன் பெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. டிஸ்னி இந்தியாவின் பெரிய பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருக்கிறது. இது குறித்து கிரிடிட் சைட்ஸ் என்ற அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்படி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசுக்கு கடன் அளிக்கும் விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை தற்போதே 90 டாலர்களாக இருக்கின்றது.இது விரைவில் 100 டாலர்களை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது காலாண்டில் ரிலையன்ஸின் எண்ணெய் சார்ந்த வருவாய் 7.3% குறைந்திருக்கிறது. ரிலையன்ஸின் இரண்டாவது காலாண்டில்,வளர்ச்சி 29.7%ஆக இருக்கிறது. எண்ணெய் நிறுவன வருவாய் மட்டுமே சரிந்துள்ளபோதும்,டெலிகாம், ரீட்டெயில் சார்ந்த வருவாய் பலமடங்கு அதிகரித்திருப்பதாகவும் கிரிடிட் சைட்ஸ் தெரிவித்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பங்குகளை 10 பில்லியன் டாலருக்கு விற்க டிஸ்னி முடிவெடுத்துள்ள நிலையில், 8 பில்லியன் டாலர்களுக்கு தான் வாங்க முடியும் என்று ரிலையன்ஸ் மதிப்பிட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ரிலையன்ஸ் வாங்கினால் அதில் 75 கடனாகத்தான் இருக்கும் என்றும் 25%ஈக்விட்டியில் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 7 முதல் 8 பில்லியன் டாலர்களுக்குள் டிஸ்னியின் டீலை முடிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எண்ணெய் சுத்தீகரிப்பு,பெட்ரோ கெமிக்கல்ஸ்,டெலிகாம் துறையில் கலவையான வருவாய் வருகிறது. டிஸ்னியின் வணிகத்தை ரிலையன்ஸ் வாங்க இருப்பது, அந்த நிறுவனம் பல இடங்களில் முதலீடுகளை பிரித்துப்போடுவதை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. BPCLஐ ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த அளவு லாபகரமானது என்றும் கிரிடிட் சைட்ஸ் குறிப்பிடுகிறது.