சிப் தயாரிப்பில் குதிக்கும் எல்&டி.,
கட்டுமானங்களுக்கு பெயர் பெற்ற எல் அண்ட் டி நிறுவனம் தற்போது சிப் தயாரிப்பில் இறங்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் சிப் தயாரிப்புக்கு இயக்குநர்கள் ,குழு உறுப்பினர்கள் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. fabless semiconductor chipகளை உற்பத்தி செய்ய எல் அண்ட் டி முடிவு செய்திருக்கிறது. 830 கோடி ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்பட இருக்கிறது. எல்அண்ட் டி நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 45%அதிகரித்திருக்கிறது.உள்கட்டமைப்புத் துறையால் இந்த லாபம் சாத்தியமாகியிருக்கிறது. இரண்டாவது காலாண்டில் மட்டும் லாபம் 3,233 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு இரண்டாவது காலாண்டில் 2229 கோடி ரூபாய் அந்நிறுவனம் லாபம் சம்பாதித்து உள்ளது.ஒரு காலாண்டில் 51,024 கோடி ரூபாய் வருவாயாக இருக்கிறது. இது 19% அதிகமாகும். செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் 89,153 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் அந்நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன. இது கடந்தாண்டு இதே காலாண்டை ஒப்பிடுகையில் 72% அதிகமாகும்.இதுவரை அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில்தான் ஆர்டர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.ஹைட்ரோகார்பன்,அர்பன் டிரான்சிட் சிஸ்டம்ஸ்,டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட துறைகளில் இந்த ஆர்டர்கள் குவிந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து மட்டும் 67%ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதன் மதிப்பு மட்டும் 59,687 கோடி ரூபாயாக இருக்கிறது.இது காலாண்டில் மட்டும் பதிவான ஆர்டர்களாகும்.