மலிவு விலை கச்சாஎண்ணெயை தேடும் இந்தியர்கள்..
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் அண்மையில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொண்டது. இதனால் அக்டோபரில் கச்சா எண்ணெய் ரஷ்யாவைவிட எங்கு குறைவான விலையில் கிடைக்கும் என்று இந்திய எண்ணெய் சுத்தீகரிப்பாளர்கள் தேடி வருகின்றனர். எஸ்போ,சோக்கோல் ஆகிய இரண்டு விலையுயர்ந்த கச்சா எண்ணெய்களை விட 10% விலை குறைவான கச்சா எண்ணெயை இந்திய சுத்தீகரிப்பாளர்கள் தேடி வருகின்றனர்.urals எனப்படும் மலிவு விலை கச்சா எண்ணெய்களைத்தான் இந்திய எண்ணெய் சுத்தீகரிப்பாளர்கள் 90%அக்டோபரில் வாங்கியுள்ளனர். ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த வகை கச்சா எண்ணெய் 75%வாங்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் மட்டும் 72%என்ற அளவில் இருந்தது. தற்போது இது 90%ஆக உயர்ந்திருக்கிறது.
ஒருநாளில் 13லட்சத்து 90 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த அளவு என்பது 20% அதிகரித்துள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெயை விட எஸ்போ ரக கச்சா எண்ணெய் 5முதல் 6 டாலர்கள் ஒரு பேரலுக்கு குறைவாகும், அதைவிட உரல்ஸ் ரகம் 5டாலர்கள் குறைவாகும். 80 முதல் 95 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக 2 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வழக்கமாக அதிகரித்து வந்த ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, தற்போது சரிந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து சீனா வழக்கத்தைவிட அதிக கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா நவம்பர் மாதத்தில் கச்சா எண்ணெயை குறைந்த அளவிலேயே ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் உடனான போர் காரணமாக ரஷ்யா ஒரு பேரல் கச்சா எண்ணெயை 60 டாலருக்கு மேல் விற்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை ஜி7 நாடுகள் விதித்திருந்தன.ஆனால் அது இப்போது பின்பற்றப்படவில்லை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை செப்டம்பர் மாதம் 39 %அதிகம் வாங்கியிருந்த இந்தியா, அக்டோபரில் 34%ஆக குறைத்துக் கொண்டது. அக்டோபரில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 9%அதிகரித்துள்ளது.ஒரு நாளைக்கு 45லட்சத்து 60 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா பல்வேறு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.