ஐபிஎலில் முதலீடு செய்ய தீவிரம் காட்டும் சவுதி..
உலகில் கோடிகளில் பணம் கொட்டும் கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் திகழ்கிறது. பணத்துக்கு பணம்,விளையாட்டுக்கு விளையாட்டு என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த துறையில் கோடிகளில் பணம் புழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் விளையாட்டின்மீது எப்போதுமே சவுதி அரேபியர்களுக்கு ஒரு தனி மவுசு இருக்கிறது.அதிலும் குறிப்பாக சவுதியின் பட்டத்து அரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள் இந்திய அரசாங்கத்தையும்,ஐபிஎல் அதிகாரிகளையும் அனுகியுள்ளனர். 30பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஒரு நிறுவனமாக கருதி அதில் முதலீடுகளை குவிக்க சவுதி அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் சவுதியின் பட்டத்து இளவரசர் இந்தியா வந்தபோது இது தொடர்பாக பேச்சுவாரத்தையும் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் பங்குகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவும் , இதே ஐபிஎல் போட்டிகளை பிறநாடுகளில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாட்டு வீரர்கள், திறமையான பயிற்சியாளர்களுக்கு உகந்த ஒரு தளமாக மாறியுள்ளது. கிரிக்கெட்டை கொண்டாடும் இந்தியர்கள் இந்த போட்டிகளுக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.