பைஜூஸ் வருவாய் அதிகரிப்பு..
கல்வித்துறையை லாபகரமாக மாற்ற முடியும் என்று கொரோனா காலகட்டத்தில் உலகிற்கு நிரூபித்த நிறுவனம் பைஜூஸ்.
இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமாக think and learnஎன்ற நிறுவனம் தங்கள் 2022 நிதியாண்டின் நிதி தணிக்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி குறிப்பிட்ட நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து569 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 2021-ல் வருவாய் குறைவாகும். 2021 நிதியாண்டில் 1552 கோடி ரூபாயாக வருவாய் இருந்திருக்கிறது. இது கடந்தாண்டு 3,569 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.பைஜூஸ் நிறுவனத்தின் நஷ்டம் குறைந்து வருவதாகவும்,2406 கோடி ரூபாயில் இருந்து நஷ்டம் 2,253 கோடி ரூபாயாக சரிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் உயர்ந்திருப்பதாக பைஜூஸ் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். மற்ற நிறுவனங்கள் 23 நிதியாண்டின் முடிவுகளையே வெளியிட்டுள்ள நிலையில் தங்கள் நிறுவனம் 22 நிதியாண்டு தரவுகளை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 21 நிதியாண்டில் பைஜூஸ் நிறுவனத்தின் நஷ்டம் 4558கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. 120 நாடுகளில் சேவை வழங்கி வரும் பைஜூஸ் நிறுவனத்துக்கு 15 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2015ஆம் ஆண்டு செயலியாக தொடங்கப்பட்ட பைஜுஸ் நிறுவனம்,அடிப்படை கல்வியுடன் சேர்த்து போட்டித்தேர்வுகள் துறையிலும் கலக்கி வருகிறது.